வவுனியாவில் உயிரிழந்த மாணவி : வெளியான காரணம்!

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் 03 வயது சிறுமி மாயம்!
Next articleவவுனியாவில் மாயமான இளைஞர் ! வெளியான புகைப்படம் !