அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் பலி

அனுராதபுரம் – கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற விதம் அங்கிருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளது.

தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தம்புள்ளை ரத்மல்கஹா எல பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் தந்தையின் கொடூர தாக்குதலுக்கு இலக்கான நான்கு வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி !
Next articleகிளிநொச்சியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 04 வயது சிறுமி பலி