கிளிநொச்சியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 04 வயது சிறுமி பலி

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

தொலைக்காட்சி பார்ப்பதற்காக ‘பிளக்கில்’ வயரை இணைத்த போது ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Previous articleஅனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் பலி
Next articleமஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி : இராமலிங்கம் சந்திரசேகரன்