யாழ் மருத்துவமனையில் பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவர் இடமாற்றம்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் காரணமாக நேற்றுமுன்தினம் கொடிகாமம் பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

அத்துடன் வைத்தியசாலைக்குள் புகுந்த நபர்களினால் வைத்தியர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவர் கோப்பாய் பகுதி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous articleயாழில் O/L பரீட்சை எழுதிய மாணவர் பலி
Next articleயாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு சென்ற யுவதி – போதை நிலையில் வைத்தியசாலையில் அனுமதி