யாழில் மாணவியைக் கடத்த முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த இளைஞர் குழு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப்பிடித்து வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்ற குழுவை இளைஞர்கள் குழு ஒன்று மடக்கி பிடித்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டையில் பேருந்தில் வரும் மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

பேருந்தில் வந்து இறங்கிய மாணவியை தாயாரின் கண்முன்னே வாகனத்தில் வந்த குழுவினர் கடத்த முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்களால் வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

கடத்தல் குழுவை பிடித்த இளைஞர்களை எச்சரித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் அவர்களை நீதிமன்றில் முன் நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ்.அனலைதீவு கடற்கரையில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள்
Next articleயாழில் பல்கலைகழக மாணவிகளின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை மடக்கி பிடித்த மாணவர்கள்!