முல்லைத்தீவில் டிக்டாக் காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், தன்னை தேடவேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி சிறுமியின் தந்தை இன்று பொலிஸாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிறுமி ஹட்டனில் இருப்பதை அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக தனக்கு அறிமுகமான இளைஞன் ஒருவரை சந்திப்பதற்காக ஹட்டனுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியைத் தேடி அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஹட்டனுக்கு செல்வதாகவும், விசாரணைகளை மேற்கொள்ளும் போது பொலிஸார் அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் புதுக்குடியிருப்புப் பொலிஸாரின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!
Next articleகிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் : 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில்!