முல்லைத்தீவில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர்  ஒருவர் பலி

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டு
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆறு பேர் காயமடைந்து மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் அதில் இருவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனைய நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!
Next articleகதிர்காமம் வரை பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்களுக்கு உதவிய இராணுவத்தினர்