கதிர்காமம் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஜோடிகள்!

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஜோடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதிர்காமம் கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் ரசிதகுமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleயாழில் கணவன் தாக்கியதில் உடைந்த பல்லை விழுங்கிய மனைவி!
Next articleநாட்டைவிட்டு வெளியேறிய பசில் மனைவி