யாழ். வைத்தியசாலையில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கர வண்டி மாயம் : விரைந்து மீட்ட பொலிஸார்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது யாழ்.போதனா வைத்தியசாலை பின் வீதியில்

திருடப்பட்ட பச்சைநிற முச்சக்கரவண்டி பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒரு முச்சக்கர வண்டி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது அந்த முச்சக்கர வண்டிக்கு இலக்கத் தகட்டை மாற்றி

பாவித்தமை தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,

Previous articleநாட்டைவிட்டு வெளியேறிய பசில் மனைவி
Next articleஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் : தொடர்பில் வெளியான தகவல்