வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் திடீரென பரவிய தீ!

வவுனியா பல்கலைக்கழகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியபளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் இரண்டு மணித்தியால போராட்டத்தினையடுத்து தீயினை முற்றாக அணைத்திருந்தனர்.

இதன் மூலமாக தீ பல்கலைக்கழக வளாகத்தினுள் பரவும் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleஇலங்கையில் நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!
Next articleயாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திய அரசின் உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் !