கண்டியில் மாயமான 14 வயது சிறுமி : பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்

அத்துடன் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் 0775251791, 0787910688 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு குறித்த சிறுமதியின் குடும்பத்தால் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Previous articleயாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திய அரசின் உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் !
Next articleயாழில் பதுக்கி வைத்த பெட்ரோல் தீப்பற்றியதில் ஆசிரியை ஒருவர் பலி !