கனடாவில் மாயமான இலங்கைத்தமிழர் : வெளியான புகைப்படம்!

கனடா – Birchmount Rd & Bertrand பகுதியில் இருந்து 87 வயதான தம்பிராஜா சிறிபதிராஜா என்ற முதியவர்
காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் நேற்றுமுன்தினம் (07) மாலை 6.20 மணிக்கு Birchmount Rd & Bertrand பகுதியில் இருந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு காணாமல்போன நபர் காணாமல்போன போதுசாம்பல் நிற உடை அணிந்திருந்ததாகவும் 05 அடி 07 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல்போயுள்ள நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.