இலங்கை அகதி என நாடகமாடிய இலங்கைத்தமிழரை கைது செய்த தமிழ்நாட்டு பொலிஸார்!

இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்தன் என்ற நபர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலமாக தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக கூறி தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார்.

தனுஷ்கோடி பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை மீட்ட கடல்சார் காவல்துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

காவல்துறை நடத்திய விசாரணையில், நேற்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.

படகில் வந்ததாக தெரிவித்தால் தன்னை அகதியாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைப்பார்கள் என அவர் முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தினேஷ்காந்தனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை கட்டியெழுப்ப எவர் முயன்றாலும் அதனை நான் ஆதரிப்பேன் – அங்கஜன் இராமநாதன்
Next articleபொருளாதார நெருக்கடியால் பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம் !