யாழில் டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் பலி

யாழில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே ஆவார்.

கடந்த 08ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Previous articleமீண்டும் ஒரு அத்தியாவசிய பொருளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்
Next articleமுகக்கவசங்கள் அணிவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!