யாழில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட கொடூர செயல்

யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் கத்தியால் தாக்கப்பட்ட இருவர்
படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றிரவு (10) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காணோர் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57), பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleமனைவியை அடித்துக் கொன்றுவிட்டு பிள்ளையின் கழுத்தை நெரித்த தந்தை!
Next articleயாழில் வீட்டின் அருகில் தங்கம் இருப்பதாக தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது