யாழ் வர்த்தக நிலையங்களுக்குள் திடீர் சோதனையை மேற்கொண்ட அதிகாரிகள் !

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி பிரதேசத்தில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 விற்பனை நிலையங்களும் நூடுல்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரு விற்பனை நிலையங்களுமாக 7 வியாபார நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது குறித்து பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Previous articleநாட்டில் நாளை நிலமை மோசமடையலாம் : வரிசைகள் அதிகரிக்கும் ஆபத்து
Next articleரஷ்யாவிடம் இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் !