அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

வரும் வெள்ளிக்கிழமை முதல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை வேலைத்திட்டமானது அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்த நம்புகிறோம். தற்போது, ​​எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் பெரும் கூடுதல் செலவு ஏற்படுவதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் உதவி மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆதிசிவன் சிலையை இடித்து புத்தர் சிலையை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிக்குகள்!
Next articleதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!