திருகோணமலையில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயம் மூவர் கைது!

இரு தரப்பினருக்கும் இடம்பெற்ற மோதலில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் திருகோணமலை குச்சவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடற்கரையில் கரைவலை இழுக்கும் போது இடமபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது.

இதனால் சாகரபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளதைடுத்து பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇந்திய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!
Next articleகிளிநொச்சியில் இடம்பெற்ற சோகம் : கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பலி