கிளிநொச்சியில் இடம்பெற்ற சோகம் : கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பலி

கதிரையில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த ஒரு வயதான குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் பெற்றோர் குழந்தையை கதிரையில் இருக்க வைத்துவிட்டு சமயலரையில் இருந்துள்ளனர்.

இதனால் குழந்தை தவறுதலாக கீழே விழுந்ததையடுத்து பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதிருகோணமலையில் இருதரப்பினருக்கும் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயம் மூவர் கைது!
Next articleமலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!