மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என செல்லமாக அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் இடம்பெற்ற சோகம் : கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பலி
Next articleபெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்