யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த மூதாட்டி : வெளியான காரணம்!

யாழில் ழூதாட்டி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (13) யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 72 வயதுடைய மூதாட்டி குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் வேளையில் தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் : வெளியான காரணம்!
Next articleவவுனியாவில் கடத்தப்பட்ட பெண் : துணிந்து மீட்ட பொலிஸார்!