யாழில் ஹயஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

வீதியால் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்றை வழிமறித்த கும்பல் வாகனம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ்.சாவகச்சோியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது.

யாழிலிருந்து பயணித்த குறித்த வாகனம் சாவக்கச்சேரியை வந்த போது இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்களில் வந்து வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் வாகனத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்
Next articleஅரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் !