அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் !

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

என்றபோதும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து வெளிப்படுத்தியிருந்தார்.

Previous articleயாழில் ஹயஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!
Next articleமுச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்க்கு நேர்ந்த நிலை!