எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளது : கரு ஜெயசூரிய

எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றினை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 1கிலோ அரிசி 200முதல் 250 வரை விற்பனையாகின்றது. உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்வடைந்து வருகின்றது.

அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த சில வாரங்களில் அரிசியின் விலை ரூ.400 ஐ தாண்ட வாய்ப்புள்ளது.எனவே அனைவரும் அடிப்படை உணவுப் பொருட்களை பெற தீவிர தலையீடு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக சில வாகனங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு!
Next articleகிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !