கடலில் நீராடச் சென்ற தாய் சடலமாக மீட்பு!

கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும் உள்ளடங்குகிறார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடலில் நீராடச்சென்று காணாமல் போவோர் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.

எனவே உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தி பொதுமக்கள் இந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

55 வயதான தாய், அவரது 16 வயதான மகன் மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து 55 வயதான தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக 18 வயதுடைய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், ஏனையவர்கள் காணாமல் போயுள்ளதோடு, அவர்களை தேடும் பணிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleயாழில் மருத்துவர் வீட்டில் கைவரிசையை காட்டிய திருடர்கள்!
Next articleபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை!!