கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட பேருந்து வசதி!

கொழும்பில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு விஷேட 20 ‘சிசு செரிய’ பேருந்து வசதி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் 20 பேருந்துடன் துவங்கும் இந்த பஸ் போக்குவரத்து சேவையில் ஒரு மாத காலத்திற்குள் ஐம்பதாக அதிகரிக்க உள்ளதாக எனவும் கூறினார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, பொது போக்குவரத்து சேவைகளின் கட்டண உயர்வு ஆகியவற்றை கருத்திற் கொண்டே புதிய பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Previous articleமரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் நபர் ஒருவர் பலி
Next articleயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பலி : பொலிஸார் விடுத்த கோரிக்கை!