போதையில் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற கணவன்! கொதிக்கும் ரசத்தை முகத்தில் ஊற்றிய மனைவி!

மது போதையில் பாலியல் தொந்தரவு செய்த கணவனின் முகத்தில் மனைவி கொதிக்கும் ரசத்தை ஊற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பமானது நேற்றையதினம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தினமும் உழைக்கும் பணத்தை வீட்டிற்கு கொண்டுவராமல் குடித்து விட்டு அட்டகாசம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியான குப்பம்மாள் கணவர் நடராஜன் குறித்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கணவனை அழைத்து சமாதனமாக பேசி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதனைத்ததொடர்ந்து மீண்டும் கணவர் குடித்துவிட்டு போதையில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் மனைவி கொதிக்கும் ரஷத்தை தனது கணவர் மீது ஊற்றியதில் கணவர் துடித்துப்போயுள்ளார்.

சம்பவம் அறிந்த பொலிஸார் கணவரை மருத்துவமணையில் அனுமதித்துள்ளதோடு மனைவியிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பலி : பொலிஸார் விடுத்த கோரிக்கை!
Next articleகொழும்பில் வெடித்த மற்றுமொறு போராட்டம்!