கொழும்பில் வெடித்த மற்றுமொறு போராட்டம்!

கொழும்பில் எரிபொருள் இன்மையால் பொதுமக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது கொழும்பு – தெகிவளை பிரதான வீதியை மறித்து பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போராட்ட களத்தை மைதானமாக மாற்றி வீதியை மறித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கொழும்பு-தெகிவளை பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டு காணப்பட்டுள்ளது. இருப்பினும் நோயாளர் காவு வண்டிகளுக்கு மாத்திரம் செல்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் தமக்கான எரிபொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்லப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

Previous articleபோதையில் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற கணவன்! கொதிக்கும் ரசத்தை முகத்தில் ஊற்றிய மனைவி!
Next articleமின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பலி!