மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பலி!

மின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (15) காலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியில் வாழும் 4 பிள்ளைகளின் தாயான அகமது உசனார் லத்தீபா (வயது 51) என்ற குடும்ப பெண் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டு வேலைகளை செய்வதற்காக வெளியில் வந்து வீட்டிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கம்பியில் கை வைத்த சமயத்தில் மின்சார ஒழுங்கு காரணமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மின்சார வயர் முன் கூடாரத்திலுள்ள தகரத்தின் பட்டு சிதைவடைந்து இருந்த நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய பெண்ணை குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous articleகொழும்பில் வெடித்த மற்றுமொறு போராட்டம்!
Next articleதாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போன 16 வயது சிறுவன்!