தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போன 16 வயது சிறுவன்!

தனது குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்தச்சம்பவமானது நேற்று (14) மாலை மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன சிறுவன் .பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஹஷான் என்பவர் என தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனை பொலிசார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் தேடி வருகின்றனர்.

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமின்சாரம் தாக்கியதில் 04 பிள்ளைகளின் தாயார் பலி!
Next articleபரீட்சை மதிப்பீட்டு கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!