சுவிஸில் உள்ள இந்துக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne Municipalité இனால் , இது சம்பந்தமான பல commissions களில் கலந்து சைவ மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான அஸ்தி கரைத்தல் சடங்கு முறைகளை விளக்கப்படுத்தி, இன்று அது செயல் வடிவம் பெற்று அனுமதியும் கிடைத்துள்ளது.

அதன்படி வரும் 25/6/2022 அன்று சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் Le conseiller municipal Monsieur Pierre -Antoine Hildbrand தலைமையில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த தகவல் சுவிஸ் வாழ் இந்து மக்களொஇடையே பரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகொழும்பு புகையிரத நிலையத்தில் காணாமல் போன முஸ்லீம் இளைஞன்
Next articleபலாலி விமான நிலையம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!