பலாலி விமான நிலையம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தவகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தால் 2025 ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மீதான பயணத் தடைகளை நீக்குமாறு இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Previous articleசுவிஸில் உள்ள இந்துக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
Next articleஎரிவாயுவின் விலை அதிகரிப்பு? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்