ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 04 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்ட மீட்பு குழு!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்களுக்கு பின் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேரந்த ராகுல் சாஹு எனும் 10 வயது சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 04 தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி வீழ்ந்ததையடுத்து குடும்பத்தினர்
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவஇடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நான்கு நாட்கள் போராட்டத்தற்கு பின்பு சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்ட சிறுவனை பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Previous articleயாழில் பொய் கூறி எரிபொருள் நிரப்ப முயன்ற சட்டத்தரணி : கொந்தளித்த பொதுமக்கள்!
Next articleஉயிரிழந்த பெண்ணின் சிதையில் குதித்து உயிரைவிட்ட இளைஞர்!