யாழில் பெண் தாதிக்கு ஆண் தாதியரால் தொலைபேசி ஊடாக வந்த கொலை மிரட்டல்!

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் கடந்த புதன்கிழமை (08-06-2022) நள்ளிரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொது தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதுதொடர்பில் வைத்தியசாலை அத்தியட்சகரிடம் முறையிட்ட பெண் தாதிய உத்தியோகத்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு வழங்கியிருந்தார்.

சம்பவத்தையடுத்து அச்சுறுத்தியவரும் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் ஆண் தாதிய உத்தியோகத்தர் என பொலிஸ் புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பவம் தொடர்பில் அறிக்கையளிக்குமாறு சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகருக்கு பணித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், பொலிஸாரும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous articleஎரிபொருள் வரிசையில் காத்திருந்து டீசல் என நினைத்து 24,000 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிய நபர்கள்!
Next articleதளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா : வெளியான விபரம்!