இந்தியாவின் கடன் உதவியால் இலங்கைக்கு கிடைத்த கடைசி டீசல்!

இந்திய கடன் வரியின் கீழ் 40,000 மெட்ரிக் தொன் இறுதி டீசல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தநிலையில் அதனை இறக்கி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதனையடுத்து எதிர்காலத்தில் நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக மற்றும் ஒரு இந்திய கடன்வரியை பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இதற்கு மத்தியில் தற்போதைய காலப்பகுதியும் மேலும் இரண்டு வார காலப்பகுதியும் நாட்டில் எரிபொருளுக்கு நெருக்கடி தீவிரமாக இருக்கும் என்று ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.