மீண்டும் விலை உயரவுள்ள உணவுப் பொருள் : வெளியான அறிவிப்பு!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் உள்ளது.

அத்துடன் முட்டை ஒன்றின் 47.50 ரூபா என்ற போதிலும், சில இடங்களில் ஐம்பது ரூபாவுக்கும் அதற்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடி, மூலப்பொருட்களுக்கான விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டின் பொருளாதார சிக்கலால் மூடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
Next articleயாழில் விடுதிகளை சோதனையிட்டபோது சிக்கிய தென்னிலங்கை யுவதிகள்!