மின்வெட்டு குறித்து வெளியான தகவல் : அதிர்ச்சியில் இலங்கை மக்கள்!

தற்போதைய மின்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஎரிபொருளுக்கு வரிசையில் நின்ற நபர் மரணம் : சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Next articleமனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : பரிதவிக்கும் குழந்தை