யாழில் வீதி ஓரத்தில் மறைந்திருந்து இரும்பு கம்பியால் இரு இளைஞர்களை தாக்கிய மர்ம நபர்!

வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சோி டச்சு வீதியில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் கோ.யசிந்தன் (வயது19), சி.விமல்ராஜ் (வயது21) ஆகிய இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleயாழில் இளம் குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!
Next articleஅனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை