அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாளையதினம் பாடசாலைகளுக்கு விடே விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் வீதி ஓரத்தில் மறைந்திருந்து இரும்பு கம்பியால் இரு இளைஞர்களை தாக்கிய மர்ம நபர்!
Next articleஇலங்கையில் சைக்கிள் விபத்துக்கும் காப்புறுதியை அறிமுகப்படுத்திய காப்பீட்டு நிறுவனங்கள் !