இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ள இணைய வழி கல்வி முறைமை : இன்றைய தினம் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான இணைய வழிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.

இதேவேளை, பிற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து இன்றைய தினம் (16-06-2022) இறுதி முடிவு எடுக்கப்படும் என நேற்றைய தினம் தெரிவிக்கப்படுகிருந்தது,

இதனை அரச தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடக ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவு எதுவும் விதிக்கப்படாது என அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Previous articleஇலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் வைரஸ் : 14 பேர் பலி !
Next articleயாழில் நள்ளிரவு தாண்டியும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!