யாழில் நள்ளிரவு தாண்டியும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நாட்டில் எரிபொருள் இன்மையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருந்து எரிபொருள் பெற்றுச்செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்றையதினம் யாழில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதனைப்பெறுவதற்கு பொதுமக்கள் நேற்று காலையிலிருந்து வரிசையில் காத்திருந்து வந்துள்ளனர்.

ஆனால் அந்த எரிபொருள் நிலையத்தில் 1000 ரூபாய்க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலுமு் நேற்றையதினம் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை தென்னிலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகையால் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் பெட்ரோலுக்கு செலுத்தும் அவதாணத்தை விட தனது உடல் ஆரொக்கியத்தில் கவணம் செலுத்துமாறு டுடே ஜப்னா சார்பாக மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Previous articleஇலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ள இணைய வழி கல்வி முறைமை : இன்றைய தினம் எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு!
Next articleயாழில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு! பெண் உட்பட 4 பேர் கைது, ஒரு பகுதி நகைகள் மீட்பு…!