யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 05 பேர் கைது : வெளியான காரணம்!

யாழ்.கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர்.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 58 வயதிற்கிடைப்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளதுடன்,

சுமார் 88 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் போத்தலை உடைத்து குத்திய கும்பல் : படுகாயமடைந்த இரு குடும்பஸ்த்தர்கள்
Next articleதொழில் நஷ்டத்தால் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி!