எரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி எரிபொருள் வாங்கும் பெண்!

நாட்டில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மக்கள் நாட்கணக்கில் காத்திருந்து எரிபொருளை பெற்றுச் செல்கின்றனர்.

கொழும்பில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கையில் நடுரோட்டில் எரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி பெண் ஒருவர் தனது காருக்கு எரிபொருள் வாங்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் எல்லோரும் வரிசையில் கால்கடுக்க மணிக்கணக்காக, நாட்கணக்காக காத்திருக்கையில் அப்பெண்ணின் செயல் கடும் விசனத்தை தோற்றியுள்ளது.

இந்நிலையில் சில பண முதலைகள் இவ்வாறு செய்யும் மோசடிகள் தொடர்பில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleதற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்!
Next articleமலையகத்தில் காணாமல் போன 12 வயது பாடசாலை மாணவன்!