மலையகத்தில் காணாமல் போன 12 வயது பாடசாலை மாணவன்!

நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) காலையில் இருந்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போன சிறுவன் டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 12 வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎரிபொருள் பாரவூர்தியை நிறுத்தி எரிபொருள் வாங்கும் பெண்!
Next articleயாழ் உதைப்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற அடிதடி