யாழ் உதைப்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற அடிதடி

வல்வெட்டித்துறையில் உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

வல்வை விளையாட்டுக்கழகத்தின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி இன்று (18) நடைபெற்றது. இதில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகமும், கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதின.

இதில் 2-0 என பாடும்மீன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

இதை தொடர்ந்து, இரண்டு அணி ரசிகர்களும் மைதானத்தில் ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர்.

பாடும்மீன் ரசிகர்கள் சிலர், ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் பகுதிக்குள் சென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது மோதல் வெடித்தது. அவர்கள் அநாகரிகமமான செய்கைகளில் ஈடுபட்டதாக ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் குற்றம் சுமத்தினர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக மைதானத்திற்குள் கொந்தளிப்பான நிலைமை காணப்பட்டது. இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டதுடன், கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

நீண்டநேரத்தின் பின் நிலைமை சுமுகமானது.

இந்த களேபரத்தினால் பரிசளிப்பு நிகழ்வும் இடைநிறுத்தப்பட்டது.

Previous articleமலையகத்தில் காணாமல் போன 12 வயது பாடசாலை மாணவன்!
Next articleயாழ். சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஜீலை – 1ம் திகதி மீள ஆரம்பம்..!