இலங்கையில் வாகன இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் : வெளியான புதிய திட்டம்!

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் வரிசையை மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு கடுமையான யோசனையான்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் திகதிகளை ஒதுக்கி எரிபொருள் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் தற்போதுள்ள வரிசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்றும் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை,தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மருத்துவ குழுக்கள் மற்றும் பொலிஸ் வாகனங்களுக்கு அடுத்த வாரம் முதல் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும்,நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் துறையினரை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleநாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் : வெளியான அறிவிப்பு!
Next articleபேருந்தில் சென்ற பெண் மீது தீ மூட்டிய மர்ம நபர் : பொலிஸார் தீவிர விசாரணை!