பேருந்தில் சென்ற பெண் மீது தீ மூட்டிய மர்ம நபர் : பொலிஸார் தீவிர விசாரணை!

பேருந்தில் பயணித்த பெண் மீது நபர் ஒருவர் தீ மூட்டிய சம்பவம் கனேடிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் கனடா ரொறன்ரோவில் ரீ.ரீ.சீ போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர் பெண்ணின் மீது திரவமொன்றை ஊற்றி தீ மூட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 35 வயதான ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் எழுமாறான அடிப்படையில் இடம்பெற்ற சம்பவம் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிப்லிங் மற்றும் இஸ்லிங்கடன் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பஸ் ஒன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பாதையில் பயணம் செய்யும் பஸ் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous articleஇலங்கையில் வாகன இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் : வெளியான புதிய திட்டம்!
Next articleஇன்று முதல் 24ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!