ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73 ஆவது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடும் நிலையில்,ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினத்தை கருப்பு தினமாக அனுஸ்டிக்க போராட்டக்காரர்கள் தயாராகி வரும் நிலையில்,பெருமளவிலான இளைஞர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காலிமுகத்திடல் போராட்ட குழு எதிர்ப்பு பதாகைகளை தாங்கியவாறு மற்றுமொரு நுழைவாயிலை முற்றுகையிட்டுள்ளதுடன்,அங்கு எதிர்ப்பு பதாகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Previous articleயாழ். பலாலி விமான நிலையத்தில் ஜுலை 01 ஆம் திகதி முதல் டிக்கெட் ஆரம்பம்!
Next articleமன்னாரில் தமிழ் மக்கனை நெகிழவைத்த இராணுவப் பெண்மனி!