யாழில் காலில் முள் குத்தியதால் இளைஞன் ஒருவர் பலி!

காலில் முள் குத்தியதால் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதான இளைஞன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் தைத்துள்ளது.

இருப்பினும் காலில் தைத்த முள்ளினை காணவில்லை, முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்ட நிலையில் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 09 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

Previous articleஎரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleமிக்ஸ் பாக்சின்கில் இந்தியாவில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்!