ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த இரு தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 357.28 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 366.83 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 356.28 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 388.91 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Previous articleசட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த நபரை மாறுவேடத்தில் சென்று கைது செய்த பொலிஸார்!
Next articleகுடும்பத் தகராறில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை !